ஓடிடியில் வெளியாகிறது பரமபதம் விளையாட்டு

By செய்திப்பிரிவு

த்ரிஷா நடித்துள்ள 'பரமபதம் விளையாட்டு' திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு கரோனா ஊரடங்கினால் இந்தப் படம் வெளியாகவே இல்லை.

தற்போது, இந்தப் படம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. முன்னதாக இவருடைய நடிப்பில் 'கர்ஜனை', 'ராங்கி', 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்