'தளபதி 65' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் இணையப் பிரபலம் அபர்ணா தாஸ்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 31) நடைபெற்ற பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்குப் பிறகே முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதில் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
தற்போது, இந்தப் படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இவர் நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அபர்ணா தாஸ் மலையாளத்தில் மிகவும் பிரபலம்.
» இன்று தேர்தலில் குஷ்பு நிற்பதற்கு அந்தச் சம்பவம்தான் விதை: சுந்தர்.சி பகிர்வு
» என் பயணத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் பால்கே விருதைச் சமர்ப்பிக்கிறேன்: ரஜினி நெகிழ்ச்சி
இவருடைய டிக்-டாக் வீடியோக்கள் பெரும் வரவேற்பு பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து அபர்ணா தாஸை மலையாளத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சத்யன் அந்திகட். இவர் இணைய உலகில் பெரும் பிரபலமானவர்.
தமிழில் விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அபர்ணா தாஸ். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மே மாதத்தில் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago