விஜய் நடிப்பில் உருவாகும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 65' என அழைத்து வருகிறது படக்குழு.
நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (மார்ச் 31) சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.
'தளபதி 65' படப்பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக புகைப்படங்களை வெளியிடும் எனத் தெரிகிறது. சென்னை, ஹைதராபாத், ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.
'தளபதி 65' படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago