கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள படத்துக்கு 'பபூன்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'ஜகமே தந்திரம்' படத்தைத் தொடர்ந்து விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படங்கள் இயக்குவது மட்டுமன்றி, 'ஸ்டோன் பெஞ்ச்' என்ற நிறுவனம் மூலம் படங்களும் தயாரித்து வருகிறார்.
'மேயாத மான்', 'பெண்குயின்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'பூமிகா' படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படத்துக்குப் பிறகு வைபவ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வந்தார்.
» 'பிங்க்' ரீமேக் 'வக்கீல் சாப்'பில் சண்டைக் காட்சிகள் ஏன்? - தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம்
» சோகமும் பயமும் எழுகின்றன: ஓடிடி தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து ராதிகா ஆப்தே கருத்து
தற்போது இந்தப் படத்துக்கு 'பபூன்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை கௌதம் மேனன், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்றது. காமெடி, ஆக்ஷன் மற்றும் டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago