பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் நாயகியாக அனு கீர்த்தி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சமீபத்தில் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் நடித்து வருவது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி - புகழ் இருவரும் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழுக்குத் தொடர்ச்சியாக திரையுலக வாய்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. சந்தானம் நடித்து வரும் 'சபாபதி' மற்றும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் புகழ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் தவறாமல் புகழ் கலந்துகொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago