67-வது தேசிய விருதுகள்: தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இமான், நாக விஷால் அசத்தல்

By செய்திப்பிரிவு

’அசுரன்’ திரைப்படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதை ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ திரைப்படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ’ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் படத்தின் ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மாலை 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ’அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை ’போஸ்லே’ திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார். தனுஷ் ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்