100 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாத்தி கமிங் பாடல்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' திரைப்படத்தின் வாத்தி கமிங் பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. அனிருத் இசையமைத்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டார். சுமார் ஒரு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் வெளியானது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலுமே இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தமிழகத்தில் 'பாகுபலி 2' சாதனையை முறியடித்தது. தற்போது யூடியூப் தளத்திலும் 'மாஸ்டர்' சாதனை படைத்துள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலின் காணொலி 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. ஜனவரி மாதம்தான் இந்தக் காணொலி பதிவேற்றப்பட்டது. ஏற்கெனவே வாத்தி கமிங் பாடலின் லிரிக் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது.

வாத்தி கமிங் பாடலுக்கு தேசிய அளவில் பல பிரபலங்களும், சர்வதேச அளவில் பல ரசிகர்களும் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்படி மிகப்பெரிய அளவில் பாடல் ஹிட்டடித்திருப்பதால்தான் பதிவேற்றப்பட சில மாதங்களிலேயே 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. #VaathiComing100MViews என்கிற ஹேஷ்டேகுடன் இந்தச் சாதனையை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்