'காஞ்சனா 3' நடிகைக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

'காஞ்சனா 3' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்த நிக்கி தம்போலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'காஞ்சனா 3'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நிக்கி தம்போலி.

'காஞ்சனா 3' படத்துக்குப் பிறகு புதிதாக வேறு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் நிக்கி தம்போலி நடிக்கவில்லை. இந்தியில் 'பிக் பாஸ் 14' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 3-வது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிக்கி தம்போலிக்கு பல்வேறு ரசிகர்கள் உருவானார்கள்.

தற்போது தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக்கி தம்போலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"இன்று காலை எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் சுய தனிமையில் இருக்கிறேன். மருத்துவரின் அறிவுரையின் பேரில் தேவைப்படும் அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருந்துகளையும் நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், என்றும் முகக் கவசம் அணியுங்கள். அடிக்கடி உங்கள் கைகளில் கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்யுங்கள், சமூக இடைவெளியைப் பேணுங்கள். அனைவருக்கும் என் அன்பு".

இவ்வாறு நிக்கி தம்போலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்