விதார்த்தின் 25-வது படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'ஆயிரம் பொற்காசுகள்', 'அன்பறிவு', 'என்றாவது ஒரு நாள்', 'ஆற்றல்', 'அஞ்சாமை' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விதார்த். அவர் நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை சீனிவாசன் இயக்கியுள்ளார். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'அண்ணாதுரை' படத்தை இயக்கியவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்தி பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு வரவேண்டும் என்பதுபோல இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விவேக் ஆனந்த், எடிட்டராக பிரவீன் கே.எல், கலை இயக்குநராக ஜெயச்சந்திரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
» காதலுக்காக சண்டையிட ஆட்கள் உண்டு; காடுகளுக்கு யார் குரல் கொடுப்பார்கள்? - இயக்குநர் பிரபு சாலமன்
» நெட்ஃபிளிக்ஸில் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் பெற்ற தணிக்கை மதிப்பீடு
இசையமைப்பாளர் மட்டும் ஒப்பந்தமாகாமல் இருந்தது. தற்போது இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஒப்பந்தமாகி பணிபுரிந்து வருகிறார்.
படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago