சென்னையில் ஆட்டோவில் பயணிக்கும் அஜித்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

சென்னையில் அஜித் ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'வலிமை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழு தயாராகி வருகிறது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தனது படங்களின் படப்பிடிப்புக்கு இடையே சைக்கிள் ஓட்டுவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர் அஜித். சமீபத்தில் கூட நீண்ட தூரம் பைக் பயணம் செய்துவிட்டுத் திரும்பினார்.

அதேபோல், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அஜித் ஆட்டோவில் பயணிக்கிறார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலரும் பகிரவே, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவு தொடர்பாக அஜித் ரசிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த கண்ணதாசன் பாலமுருகன், "அஜித் சாரின் எளிமை அபாரமானது. அவர் தெருக்களில் நடக்கிறார், ஆட்டோவில் செல்கிறார். இவை அனைத்தையும் அவர் தனது இதயத்திலிருந்து செய்கிறார். அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், மனதளவில் எளிய மனிதராகவே வாழ்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்