நான் பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குநர்களில் நீங்களும் ஒருவர் என்று கார்த்திக் சுப்புராஜுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.
'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'மெர்க்குரி', 'பேட்ட' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவருக்கு இன்று (மார்ச் 19) பிறந்த நாளாகும். அவருக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் "பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ். நான் பணியாற்றிய மிகச் சிறந்த இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள். இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவது தொடர்பாகத் தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், ஓடிடியில் வெளியீடு குறித்த அறிவிப்பையோ, படத்தின் டீஸரையோ தனுஷ் இதுவரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை.
» செல்வராகவன் அற்புதமான நடிகர்: 'சாணிக் காயிதம்' இயக்குநர்
» முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராகும் தேவி ஸ்ரீ பிரசாத்
தற்போது கார்த்திக் சுப்புராஜுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தனுஷ், இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை.
'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago