த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபதம் விளையாட்டு' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரமபதம் விளையாட்டு'. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் நந்தா, ரிச்சர்ட், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.
இந்தப் படத்துக்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் பலரும் த்ரிஷாவைக் கடுமையாகச் சாடினார்கள்.
» மக்கள் வருகை குறைவு; மூடப்படும் திரையரங்குகள்: திரையரங்க உரிமையாளர்கள் வேதனை
» பொன்.ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பு
தற்போது, இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் பேசி இதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் புத்தாண்டுக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
39 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago