தனது கதைகளைத் திரைப்படமாக்க விரும்புவதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐஏன்எஸ் நிறுவனத்துக்கு ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
''எழுத்து என்பது எப்போதுமே எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நான் பாடல்கள் எழுதுகிறேன், கவிதைகள் எழுதுகிறேன், சோகமான தருணங்களில் அவை நம்மை நாம் சிறப்பான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன என்று நான் நம்புகிறேன். நான் எழுதும் கவிதைகளுக்கும், கதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கடும் வேலைப்பளுவுக்கு இடையே எழுத்து மட்டுமே எனக்கு அவற்றிலிருந்து விடுபட ஒரு நிவாரணியாக இருக்கிறது. பாடல்கள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். பல ஆண்டுகளாக நான் என் திறன்களைத் தொடர்ந்து கூர்தீட்டி வருகிறேன்''.
» 'அண்ணாத்த' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு ஒப்பந்தம்
» சினிமா மீதான பாலகிருஷ்ணாவின் காதல் ஈடு இணையற்றது: பிரக்யா ஜெய்ஷ்வால் பகிர்வு
இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இது தவிர பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago