'ஏலே' படத்தைத் தொடர்ந்து மற்றொரு புதிய படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'ஏலே'. இந்தப் படம் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்த் திரையுலகில் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து, நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு சன் டிவியில் 'நாங்க ரொம்ப பிஸி' படம் வெளியானது. இது தொலைக்காட்சி வெளியீடு என்று திட்டமிடப்பட்டே எடுக்கப்பட்டதால் அப்படத்தை இந்தப் பட்டியலில் குறிப்பிட முடியாது. ஆனால், 'ஏலே' படம் திரையரங்க வெளியீடு என்று திட்டமிடப்பட்டு, பின்னர் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்று மாறியதால் முதல் படம் என்று குறிப்பிட வேண்டியதாகிறது.
தற்போது புதிதாக மற்றொரு படமும் 'ஏலே' பாணியைப் பின்பற்றவுள்ளது. அதன் பெயர் 'சர்பத்'.
பிரபாகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதிர், சூரி, ரகசியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் சிங்கர் அஜீஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
இந்தப் படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago