விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் தவறானது எனப் படக்குழுவினர் தெரிவித்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
தற்போது 'டாக்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையே, விஜய் படத்தின் முதற்கட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார் நெல்சன். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் அங்கு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் நெல்சன்.
இதில் வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தபோது, "இன்னும் வில்லன் யார் என்பது முடிவாகவில்லை. வில்லனாக யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிசீலனை செய்தார்களோ, அந்தப் பட்டியலில் நவாசுதீன் சித்திக்கின் பெயரே இல்லை. அனைத்தும் ஒப்பந்தமாக முடிவானவுடன் முறையாக அறிவிப்பு வரும்" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago