இந்தியில் இயக்குநராக அறிமுகமாகும் ரவி.கே.சந்திரன்

By ஸ்கிரீனன்

'யான்' படத்தினைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இந்தியிலும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'யான்' படத்தினை இயக்கி வருகிறார் ரவி.கே.சந்திரன். ஒளிப்பதிவாளராக தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் மிளிர்ந்தவர், இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

இந்தியில் பல்வேறு முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுக்கு நண்பர்களாக இருக்கும் ரவி.கே.சந்திரன் ஏன் இந்தியில் படம் இயக்கவில்லை என்ற கேள்வி நிலவியது. அதற்கு விடையளிக்கும் வகையில் தனது அடுத்த படத்தினை இந்தியில் இயக்க இருக்கிறார்.

பிரெஞ்ச் படமான 'POINT BLANK' என்னும் படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார் ரவி கே. சந்திரன். இப்படத்தினை 'பில்லா 2' படத்தினைத் தயாரித்த சுனிர் கேட்டர்வால் தயாரிக்க இருக்கிறார்.

அப்படத்தின் கதையை இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையில், இப்படத்தினை இயக்க இருக்கிறார். அப்படத்தின் தமிழ் உரிமையும் இந்தி படத்தினை தயாரிக்க இருக்கும் சுனிர் கேட்டர்வாலிடமே இருக்கிறது.

முதலில் இந்தி ரீமேக்கை தயாரித்து விட்டு, பிறகு தமிழில் தயாரிக்கிறார்களா அல்லது இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக ரவி.கே.சந்திரன் இயக்க இருக்கிறாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்