சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் 'அரண்மனை 3' படத்தைக் கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. 'ஆக்ஷன்' படத்தின் தோல்விக்குப் பிறகு, மீண்டும் 'அரண்மனை 3' படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் சுந்தர்.சி
ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்றன.
இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் நடத்தி முடித்தது படக்குழு. 'அரண்மனை 3' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்ற முடிவு செய்துள்ளது 'அரண்மனை 3' படக்குழு. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago