விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு 'டாணாக்காரன்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'பாயும் ஒளி நீ எனக்கு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு. இந்த இரண்டு படங்களுக்கு முன்னதாக பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படமொன்றில் நாயகனாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பெயரிடப்படாமல் இருந்த இந்தப் படத்துக்கு 'டாணாக்காரன்' என தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பல்வேறு திரையுலக பிரபலங்கள் 'டாணாக்காரன்' குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

'டாணாக்காரன்' படத்தைப் புதுமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகியாக அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரபுவுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக ஃபிலோமின் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

51 mins ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்