அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் இணையும் ஹாஸ்டல்

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள படத்துக்கு 'ஹாஸ்டல்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

'ஓ மை கடவுளே' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நாயகனாக வலம் வரத் தொடங்கியுள்ளார் அசோக் செல்வன். அதற்குப் பிறகு 'ரெட் ரம்', 'தீனி' உள்ளிட்ட சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த படமும் ஒன்றாகும்.

இந்தப் படத்தை 'சதுரம் 2' இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வந்தார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தற்போது இந்தப் படத்துக்கு 'ஹாஸ்டல்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இந்தப் படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'அடி கப்பியரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதற்கு ஒளிப்பதிவாளராக பிரவீன், இசையமைப்பாளராக போபோ சசி, எடிட்டராக ராகு, கலை இயக்குநராக துரைராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்