'அந்தாதூன்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்: இயக்குநர் விலகல்

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஃப்ரெட்ரிக் விலகியுள்ளார்.

இந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 'அந்தகன்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவிருந்தார்.

இன்று (மார்ச் 10) 'அந்தகன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது படக்குழுவினரின் அறிவிப்புப்படி இயக்குநர் பொறுப்பிலிருந்து ஃப்ரெட்ரிக் விலகியுள்ளார். தற்போது தயாரிப்பாளர் தியாகராஜனே இயக்குகிறார்.

இதில் பிரசாந்துடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

முதலில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வந்தார். ஆனால், இன்றைய படக்குழுவினர் அறிவிப்பில் சந்தோஷ் நாராயணன் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் அவரும் விலகியிருப்பதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்