'விக்ரம்' படத்தில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கமல். அத்தனை பணிகளையும் முடித்துவிட்டு 'விக்ரம்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கிடையே கமலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கமலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நடிப்பதற்கு லாரன்ஸ் ஆர்வம் காட்டிவருகிறார். ஆகையால், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
» 'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு
» கோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
முன்னதாக, 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசியபோது, தன்னுடைய சிறு வயதில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்ததாகக் குறிப்பிட்டார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக கமல் ரசிகர்கள் லாரன்ஸைக் கடுமையாக விமர்சித்தனர். அப்போது கமலைச் சந்தித்து தனது பேச்சு தொடர்பாக லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago