'வலிமை' விளம்பரப்படுத்தும் பணிகள்: யுவன் தகவல்

By செய்திப்பிரிவு

'வலிமை' விளம்பரப்படுத்தும் பணிகள் தொடர்பாக யுவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது.

தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. அதற்குப் பிறகு அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தான் அஜித் டப்பிங் பேச முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, 'வலிமை' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்கவுள்ளது படக்குழு. இது குறித்த தகவல்கள் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் உலவி வருகிறது. நேற்று (மார்ச் 2) இணையதளம் ஒன்றில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் யுவன்.

அப்போது பல அஜித் ரசிகர்கள் "வலிமை அப்டேட்" என்று கருத்து பதிவிடத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக யுவன் "’மோஷன் போஸ்டர், படத்தின் விளம்பரங்கள் போன்ற விஷயங்களுக்கான பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

யுவனின் இந்தப் பதிலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இதனால் விரைவில் 'வலிமை' விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது. இந்தப் பதில் மட்டுமன்றி துப்பாக்கி சுடும் தளத்துக்கு அஜித் வரும் புகைப்படங்கள் மற்றும் தயாராகும் புகைப்படங்கள் ஆகியவையும் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்