ஃபைசலுக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி- கமீலா நாசர் உருக்கம்

நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசல் (24), மே 22 -ம் தேதி நண்பர்களு டன் சென்னை கடற்கரை சாலை யில் காரில் சென்றுகொண்டிருந்த போது பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று நண்பர்கள் பலியாக கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் நூருல் ஹசன் ஃபைசல்.

மகன் தீவிர சிகிச்சைப் பிரி வில் இருந்தாலும் தன்னால் தயாரிப்பாளர்கள் நஷ்ட மடையக் கூடாது என்பதால் வேதனையை இதயத்தில் அடக் கிக்கொண்டு படப் பிடிப்புகளுக்கு சென்று வருகி றார் நாசர். இந்நிலையில் மக னுக்கு பக்கத்திலே இருந்து கவனித்துக்கொண்டிருக்கும் நாசரின் மனைவி கமீலா நாசரை சந்தித்தோம்.

‘‘எனது மற்ற இரண்டு மகன்க ளுக்கும் மூத்தவன் ஃபைசல் தான் ரோல்மாடல். எந்த ஒரு விஷ யத்தையும் அவனை நம்பி ஒப் படைக்கலாம். அந்த அள வுக்கு பொறுப்பானவனாக இருப் பான். தனது நேரத்தில் பெரும் பகுதியை புதிய கிரியேடிவிடி பணிகளுக்காவே செலவிடுகிற பையன் ஃபைசல். விரைவில் குணம்பெற்று முழு ஆரோக்கி யத்தோடு வீடு திரும்புவான்’’ -என்று அருகில் அமர்ந்திருந்த மகன்கள் லூத்ஃபுதின், அபி மெஹ்தி ஹசன் ஆகியோரின் கரங்களை இறுக்கப்பிடித்து நம் பிக்கை வார்த்தைகளை படர விடுகிறார், கமீலா நாசர்.

“தன்னோட 8-ம் வகுப்பி லேயே அனிமேஷன் கேம்ஸ் மீது அளவில்லாத காதல் கொண்ட பையனாக வளர ஆரம்பித்தவன். ஒரு தடவை சிங்கப்பூர் சென்றபோது ‘கேம் அண்ட் கேரியர்’ என்ற புத்தகம் ஒன்றை வாங்கிக்கொடுத் தேன். அதை முழுக்க படித்து விட்டு பிளஸ் டூ படிக்க மாட் டேன் கேம் டிசைனிங் படிக்கப் போகிறேன் என்று அடம்பிடிக்கத் தொடங்கிட்டான். அப்போது எங்கள் தயாரிப்பில் ‘பாப் கார்ன்’ படம் முடித்த நேரம். பொருளாதார சூழல் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாகவும் இருந்தது. ‘‘என்னை படிக்க வைங்க. நான் என்னோட தம்பி களை படிக்க வைக்கிறேன்’’ என்று உறுதியாக கூறினான். அவனது விருப்பத்தின்படியே மலேசியாவில் பி.ஏ கேம் ஆர்ட் (ஹானர்) படிப்பை முடித்து திரும் பியதும் பெங்களூரில் வேலை பார்த்தான். பிறகு ‘அங்கே 2டி ஸ்பெஷல் மட்டும்தான் இருக்கு. எனக்கு 3டி யில் வேலை பார்க்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு சென்னைக்கே வந்துவிட்டான். பெங்களூரில் வேலைபார்த்த 14 மாதங்கள் இவன் நாசர் மகன் என்பது அங்குள்ள யாருக்குமே தெரியாது.

ஸ்கல்ப்சர் டிசைன்

எங்கள் இரண்டாவது பையன் லூத்ஃபுதின் இன்று இசை படித்து நடிக்கவும் வந்துவிட்டான். இவ னோட எல்லா ஆர்வமும் ஃபைசலி டம் இருந்து தொற்றிக்கொண்டது தான். ‘கோச்சடையான்’ ஆடியோ வெளியீட்டு டிரெயிலரை பார்த் துவிட்டு அதைப்போல அப்பா நாசரை வேறொரு புதிய கோணத் தில் ஸ்கல்ப்சர் டிசைனிங்கில் செய்து காட்டினான் ஃபைசல்.

தவறாக எழுத வேண்டாம்..

‘பசங்க சீட் பெல்ட் போட வில்லை; அஜாக்கிரதையால் வந்த விபத்து, டிரங்க் அண்ட் டிரைவ்- வாக இருக்கலாம்’ இப்படி சிலர் இந்த விபத்தை தவ றாகவே எழுதுறாங்க. புகைப்படங் களை மாற்றிமாற்றி இணையத் தில் பதிவிடுகிறார்கள். இறந்தவர்க ளில் ஒருவர் எங்களோட உறவி னர் என்றெல்லாம் தவறான விஷ யங்களை அவசரமாக செய்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறார்கள்.

அதையெல்லாம் படிக்கும் போது மனதை ரொம்பவே பாதிக்கிறது. விபத்து நடந்தபோது சீட் பெல்ட் அணிந்திருந்ததற்கான தடம் அவனது கழுத்தில் அப்ப டியே பதிந்துள்ளது. இரவு 12 மணிக்கு காரை ஓட்டினாலும் சிவப்பு விளக்கு போட்டால் உடனே நின்று பின்னர்தான் காரை நகர்த்துவான். ஃபைசல் என் மகன் என்பதற்காக இதை சொல்ல வில்லை. யாரையும் தவறாக எழுத வேண்டாம்.. ப்ளீஸ்.

நன்றிக்கடன்

ஃபைசல், மலேசியாவில் இருக் கும் போது ஒரு நாளைக்கு 5 வெள்ளி கூட செலவு செய்ய மாட் டான். எல்லா வசதிகளும் இருந் தும் பையன்களை மிடில் கிளாஸ் பிள்ளைகளாகத்தான் வளர்த்தி ருக்கிறோம். விபத்து நடந்த அன்று கூட ‘அஞ்சான்’ படத்திற்கு டிசைனிங் செய்துகொடுப்பதற் காக தனஞ்செயன் சாரை நண்பர் களுடன் சேர்ந்து பார்த்துவிட்டுத் தான் கிளம்பியிருக்கிறார்கள். ஃபைசலுக்கு தலையில் அடிபட்ட தால் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனித்து வருகி றார்கள். விபத்து நடந்த நாள் முதல் இன்று வரைக்கும் மருத்து வர்கள் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள். கமல் சார், சரத் குமார் சார், இயக்குநர் ஏ.எல்.விஜய் உள்ளிட்ட எத்தனையோ சினிமா நண்பர்களும், வெவ்வேறு துறை சார்ந்த நண்பர்களும் அக்கறையோடு நலம்பெற பிரார்த்தித்தும், விரும்பி வந்து விசாரித்தும், தங்களோட உறுதுணை யையும், அன்பையும் அளித்து வருகிறார்கள். எல்லோருக்கும் நன்றி. உடல்நலம் முன்னேறி வந்த பிறகு எல்லோருக்கும் நன்றி சொல்ல எங்கள் மகன் ஃபைசலும் கடமைப்பட்டிருக்கிறான்’’ என்கிறார் கமீலா நாசர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE