இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பதாய் ஹோ' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றினார்.
தற்போது இதன் தமிழ் ரீமேக் முடிவாகியுள்ளது. 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்ஜே பாலாஜி இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான பணிகளைக் கவனித்து வருகிறார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார் போனி கபூர்.
தமிழ் ரீமேக்கிற்காக கே.பாக்யராஜிடம் 'வீட்ல விசேஷங்க' தலைப்புக்கான உரிமை குறித்துப் பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளதாகவும், 'வீட்ல விசேஷங்க' தலைப்பிலேயே 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக் தயாராகும் என்றும் தெரிகிறது.
» அமிதாப் பச்சனுக்கு கண் அறுவை சிகிச்சை: ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து
» நார்மேன் லியருக்கு ‘கரோல் பர்னெட்’ விருது: கோல்டன் குளோப் விழாவில் கவுரவம்
ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'மூக்குத்தி அம்மன்' படத்தை சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. அவர் தனியாக இயக்கும் முதல் படமாக 'பதாய் ஹோ' தமிழ் ரீமேக் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago