'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

தாணு தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ள 'நானே வருவேன்' படத்தை இயக்கவுள்ளார் செல்வராகவன். அந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு, சென்னை திரும்பியவுடன் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கலந்து கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்தே செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தனுஷ் படத்தைத் தொடங்கும் முன்பு, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'சாணிக் காயிதம்' படத்தில் நடிக்கவுள்ளார் செல்வராகவன். அவர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகிவிட்டாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இன்று (பிப்ரவரி 26) சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

'சாணிக் காயிதம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் இணையத்தில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்