'தளபதி 65' வந்தால் 'கே.ஜி.எஃப்' மறந்துவிடுவார்கள்: வைரலாகும் ஸ்டண்ட் கலைஞரின் வீடியோ

By செய்திப்பிரிவு

'தளபதி 65' படம் வெளியானால், 'கே.ஜி.எஃப்' படத்தை மறந்துவிடுவார்கள் என்று சண்டைக் கலைஞர் திலீப்குமார் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கவுள்ள படத்துக்காகத் தயாராகி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளின் இயக்குநர் யார் என்பதை இன்னும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் சண்டைக் கலைஞர் திலீப் குமார் என்பவர் பேசும் வீடியோ ஒன்று, விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவர் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ்விடம் பணிபுரிந்து வருகிறார்.

"அடுத்த ஆண்டு 'கே.ஜி.எஃப்' படத்தை மறந்துவிடுவீர்கள். ஏனென்றால் 'தளபதி 65' படத்தின் சண்டைக் காட்சிகள் அந்தளவுக்கு பவராக இருக்கும். அதைப் பற்றிப் பேசுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார் திலீப்குமார். இந்த வீடியோ பதிவின் மூலம் 'தளபதி 65' படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் இயக்கவுள்ளார் என்பது தெளிவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்