விக்னேஷ் சிவன் படத்தில் நாயகியாகும் பாடகி ஜோனிடா காந்தி

By செய்திப்பிரிவு

விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் படத்தின் நாயகியாக பாடகி ஜோனிடா காந்தி நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். இயக்கத்தோடு நில்லாமல் பாடலாசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். தற்போது 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

'ராக்கி', 'கூழாங்கல்', 'நெற்றிக்கண்' ஆகிய படங்களைத் தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், புதிய படமொன்றைச் சமீபத்தில் அறிவித்தார். 'வாக்கிங்/டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வி.விநாயக் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் நாயகன், நாயகி குறித்து எந்தவொரு தகவலையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. தற்போது, இதில் யார் நடித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்த கே.கே நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக ஜோனிடா காந்தி நடித்து வருகிறார். இவர் பிரபலமான பாடகி ஆவர். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' படத்திலிருந்து 'செல்லம்மா' என்ற பாடல் மிகவும் வைரலானது. அந்தப் பாடல் வீடியோவில் நடித்திருந்தார் ஜோனிடா காந்தி.

இந்தக் கதைக்கு நாயகியாக ஜோனிடா காந்தி பொருத்தமாக இருப்பார் என்று அவரைத் தேர்வு செய்துள்ளது படக்குழு. சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாண்டிச்சேரியில் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்