ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜேஷ் இயக்கி வரும் படத்துக்கு ‘வணக்கம்டா மாப்ள’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ். இந்தப் படத்தில் நாயகனாக நடித்து, இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார்கள்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்களிலிருந்து, ஒரு பாடலை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்நிலையில் இப்படத்துக்கு ‘வணக்கம்டா மாப்ள’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது.
டிக் டாக் செயலியில் தேனியைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் பயன்படுத்தும் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமானது. தற்போது அதையே தனது படத்தின் தலைப்பாக இயக்குநர் ராஜேஷ் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago