விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நாயகனாகும் அதர்வாவின் தம்பி?

By செய்திப்பிரிவு

விஷ்ணு வர்தன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக அதர்வாவின் தம்பி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளான சிநேகா பிரிட்டோவை திருமணம் செய்துள்ளார் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி இந்த திருமணம் நடைபெற்றது. தமிழ்த் திரையுலகில் ஆகாஷை நாயகனாக்க முன்னணி இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள்.

இதில் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் ஆகாஷை நாயகனாக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியில் 'ஷெர்ஷா' படத்தை இயக்கி முடித்துள்ளார் விஷ்ணு வர்தன்.

அதன் பணிகள் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதால் ஆகாஷ் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனிப்பார் எனத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வாவும் தமிழ்த் திரையுலகில் நாயகனாக வலம் வருகிறார். அவரைத் தொடர்ந்து ஆகாஷும் நாயகனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்