சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதியினருக்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி சைஃபும் கரீனாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது குழந்தையை தாங்கள் எதிர்பார்ப்பதாக இருவரும் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கரீனா கபூர் தான் நடித்து வந்த படங்களின் பணிகளை முடித்துவிட்டு, ஓய்வெடுக்கத் தொடங்கினார். அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார்.
நேற்று (பிப்ரவரி 20) இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கரீனா கபூர். அவருக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. கரீனா கபூருடன் குழந்தை இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்தப் புகைப்படத்தை வைத்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், கரீனா கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago