'வலிமை' - 'மாஸ்டர்' இயக்குநர்கள் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

'வலிமை', 'மாஸ்டர்' படங்களின் இயக்குநர்கள் சந்தித்துப் பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டு கழித்து வெளியானபோதும் கூடக் கொண்டாடப்பட்டது.

தற்போது கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தை இயக்கி வருபவர் ஹெச்.வினோத். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் 'வலிமை' படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரிடமும் ரசிகர்கள் "வலிமை அப்டேட்" எனக் கேட்டு வருகிறார்கள். இது தொடர்பாகப் படக்குழுவினர் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ஹெச்.வினோத் - லோகேஷ் கனகராஜ் இருவரும் சந்தித்துப் பேசியதுதான் இன்றைய சமூக வலைதள ஹாட் டாக்.

ஹெச்.வினோத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, "பல ஆண்டுகள் கழித்து வினோத் அண்ணாவுடன் செலவழித்த நேரம் நன்றாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது, "இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இருவருமே மகிழ்ச்சியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்" என்று தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்