‘வாட் இஸ் வலிமை’ என்று மொயின் அலி கேட்டார்: அஸ்வின் பகிர்வு

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் வலிமை என்றால் என்ன என்று கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. ஒரே ஒரு சண்டைக்காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவினர் கொடுக்கவில்லை என்பதால், இது தொடர்பாகப் பிரபலங்களிடம் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்தனர் அஜித் ரசிகர்கள். இது சமூக வலைதளத்தில் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. இதைத் தாண்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் "வலிமை அப்டேட்" என்று கேட்டு வந்தார்கள். இதுகுறித்து நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோரும் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தன்னிடம் வந்து, வலிமை என்றால் என்ன என்று கேட்டதாகத் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

''நாம் திரைப்படங்களின் மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் என் பின்னாலிருந்து ‘தல.. அஸ்வின்.. வலிமை அப்டேட்’ என்று சொன்னார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆடிப் போய்விட்டேன். வீட்டுக்குச் சென்று கூகுள் செய்து பார்த்தபோது என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

மேட்ச் ஆடிக்கொண்டிருக்கும்போது வலிமை அப்டேட் கேட்டால் என்னவென்று நினைப்பது? அடுத்த நாள் மொயின் அலி என்னிடம் வந்து ‘வாட் இஸ் வலிமை?’ என்று கேட்டார். அதே இடத்தில் நிற்கும்போது அதே கேள்வியை அவரிடமும் கேட்டுள்ளார்கள் என்று அப்போதுதான் தெரிந்தது. ஒரு இங்கிலாந்து வீரரிடம் 'வலிமை' அப்டேட் கேட்டதெல்லாம் அற்புதம், கலக்கிவிட்டீர்கள்''.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்