கிருஷ்ணாவின் 'பெல் பாட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள 'பெல் பாட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயதீர்தா இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி, ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் 'பெல் பாட்டம்'. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கைக் கைப்பற்றி அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக் பணிகளும் தொடங்கப்பட்டன. சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் ரீமேக்கில் கிருஷ்ணா நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக மஹிமா நம்பியார், முக்கியக் கதாபாத்திரத்தில் 'பருத்தி வீரன்' சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று (பிப்ரவரி 14) கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பெல் பாட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கிருஷ்ணாவின் நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் சுமார் 30 பேர் இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, எடிட்டராக கோபி கிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சார்லஸ் இம்மானுவேல் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்