ஷங்கர் இயக்கத்தில் ராம்சரணை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமல் - லைகா நிறுவனம் கருத்து மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மும்முரமாகிவிட்டார் கமல். இதர நடிகர்களும் அடுத்டுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இயக்குநர் ஷங்கர் மட்டும் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்தக் கதையில் பல்வேறு மொழிகளின் முன்னணி நாயகர்களை இணைந்து நடிக்கவுள்ளனர் எனத் தகவல் வெளியானது. ஆனால், இயக்குநர் ஷங்கரோ எந்தவித தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்கவுள்ள படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'ஆர்.ஆர்.ஆர்' படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது. ஷங்கர் - ராம்சரண் கூட்டணி படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இவர் முன்னதாகவே ஷங்கருக்கு மிகவும் பரிச்சியம். ஏனென்றால், இவர் தான் முதன்முதலில் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.
இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. இது தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்காகத் தயாரிப்பாளர் தில் ராஜூ சென்னையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷங்கரும் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்ட நிலையில், 'இந்தியன் 2' படத்தின் நிலை என்ன என்பது தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago