'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க பல்வேறு காமெடி நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து, 'டான்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை (பிப்ரவரி 11) தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இதில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். மார்ச் 26-ம் தேதி வெளியாகவுள்ள 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் - ப்ரியங்கா மோகன் ஜோடி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர். ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ள சில முக்கிய நடிகர்களைப் படக்குழு அறிவித்துள்ளது. முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய் மற்றும் சிவாங்கி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகி வருபவர் சிவாங்கி. அவர் ஒப்பந்தமாகியுள்ள முதல் பெரிய படமாக 'டான்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
» பீட்டா அமைப்பின் விளம்பரத்தில் சோனு சூட்: சைவ உணவுக்கான பிரச்சாரம்
» ஹிப் ஹாப் தமிழாவின் 'சிவகுமாரின் சபதம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேலும், சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது சிவாங்கிக்கு தான் உட்பட தனது வீட்டில் உள்ள அனைவருமே தீவிர ரசிகர்கள் என்று மிகவும் புகழ்ந்து பேசியது நினைவு கூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago