சூர்யாவுக்கு கரோனா தொற்று; சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாக ட்வீட்- விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

'சூரரைப் போற்று' படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. தற்போது 2டி நிறுவனம் தயாரித்து வரும் படமொன்றில் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் சூர்யா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தற்போது நலமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

சூர்யா விரைவில் நலம்பெறவேண்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் பிரபலங்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நடிகர் சூர்யா தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவிட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்