சாம் ஆண்டன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான படம் '100'. சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசையமைத்த இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் பணிபுரிந்திருந்தார்.
ஆரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து யோகி பாபு நாயகனாக நடித்த 'கூர்கா' படத்தை இயக்கி, தயாரித்திருந்தார் சாம் ஆண்டன். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்குக் கதை எழுதி வந்தார். அந்தக் கதையில் நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இறுதியாக, இந்தக் கதையைக் கேட்ட அதர்வா உடனடியாக நடிக்கச் சம்மதம் தெரிவித்து தேதிகள் ஒதுக்கியுள்ளார். முழுக்க ஆக்ஷன் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் ஒரே காட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது அதர்வாவுடன் நடிக்கவுள்ள நடிகர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago