'டெனெட்' படத்துடன் ஒப்பிட்டுப் பரவி வரும் கருத்துகளுக்கு 'மாநாடு' படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியானது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முழுக்க நேரத்தை மையப்படுத்தி, இந்தப் படத்தின் டீஸர் அமைந்திருந்தது.
உடனடியாக இணையவாசிகள் பலரும், 'டெனெட்' படத்தின் காப்பி என்று கருத்துத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இந்தக் கருத்து வைரலாகப் பரவவே, 'மாநாடு' இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
» இன்றைய சூழலுக்குத் தேவையான படம் 'மாநாடு': எஸ்.ஏ.சி
» 'விடிவி' எடுத்தவன்தான் சிறந்தவன்: மனம் திறந்த கெளதம் மேனன்
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"எங்கள் 'மாநாடு' படத்தின் டீஸரை 'டெனெட்' படத்தோடு சிலர் ஒப்பிடுவது எங்களுக்குக் கவுரவம்தான். எனினும் துரதிர்ஷ்டவசமாக இதற்கு அதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு 'டெனெட்' படம் புரியவே இல்லை. ட்ரெய்லருக்குக் காத்திருங்கள். அப்போது நீங்கள் அதை வேறொரு படத்துடன் ஒப்பிடலாம்".
இவ்வாறு வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago