கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவுள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரு படங்கள் வெளியாகின. இதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது.
வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று (பிப்ரவரி 3) படக்குழு வெளியிட்டது. கெளதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்த முந்தைய இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது. அதன் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளை கெளதம் மேனன் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago