வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழ்த் திரையுலகில் பல்வேறு ஆந்தாலஜி படங்கள் உருவாயின. அதில் ஒன்றுதான் 'குட்டி லவ் ஸ்டோரி'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆந்தாலஜி காதலை மையப்படுத்திய 4 கதைகள் கொண்டதாகும். இதனை கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால், 'குட்டி லவ் ஸ்டோரி' பெயருக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் 'குட்டி ஸ்டோரி' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இதில் கெளதம் மேனன், வருண், விஜய் சேதுபதி, அமலா பால், சாக்ஷி அகர்வால், மேகா ஆகாஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருப்பதாவது:
"இந்த நீண்ட பொது முடக்கக் காலத்திற்குப் பிறகு தயாரிப்பாளரின் முதல் கடமை என்பது திரையரங்குகளை ஆதரிப்பதே ஆகும். அதிலும் கமர்ஷியல் சினிமாவின் அங்கத்தில் பங்கு வகிக்கும் நான் திரையரங்க வெளியீட்டை ஆதரிப்பது முக்கியமான கடமை ஆகும். ரசிகர்கள், தியேட்டர்கள் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ள இந்தத் தருணத்தில் அவர்களுக்கான படங்களை தியேட்டரில் வெளியிடுவது நமது அனைவருடைய பொறுப்பு ஆகும். இதனை முன்னெடுத்து 'குட்டி ஸ்டோரி' திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகும்"
இவ்வாறு ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago