எஸ்.ஜே..சூர்யா - யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'கடமையை செய்' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
'நெஞ்சம் மறப்பதில்லை', 'மாநாடு', 'பொம்மை' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 'டான்' படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
'கடமையை செய்' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. வேங்கட் ராகவன் இயக்கவுள்ள இந்தப் படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கவுள்ளது.
'கடமையை செய்' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதனை 'முத்தின கத்திரிக்காய்' படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் இயக்கவுள்ளார்.
» சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
» 'திட்டம் இரண்டு' படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் மும்முரம்
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்னசாமி, இசையமைப்பாளராக அருண்ராஜ், கலை இயக்குநராக எம்.ஜி.முருகன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 'கடமையை செய்' படத்தினை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago