'எஃப்.ஐ.ஆர்' படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் மும்முரம்

By செய்திப்பிரிவு

'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு மும்முரமாகியுள்ளது.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் படம் 'எஃப்.ஐ.ஆர்'. இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சென்னையில் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாகியுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.

'எஃப்.ஐ.ஆர்' படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் "'எஃப்.ஐ.ஆர்' படப்பிடிப்பு முடிவடைந்தது. பட்ஜெட், ஆக்‌ஷன், தயாரிப்பு, படப்பிடிப்பு இடங்கள் மற்றும் நிச்சயமாகப் படத்தின் உள்ளடக்கத்திலும் எனது மிகப்பெரிய படம். 80 நாட்கள் கடின உழைப்பு (120+ கால்ஷீட்). இன்று எனது மகன் ஆரியன் பிறந்த நாளும் கூட. உங்கள் அன்பு தேவை" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 'எஃப்.ஐ.ஆர்' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 'மோகன்தாஸ்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார் விஷ்னு விஷால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்