சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்

By செய்திப்பிரிவு

சூர்யா தயாரிக்கவுள்ள புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' மற்றும் 'பிக் பாஸ் சீசன் 4' ஆகிய நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலமாகத் திரையுலகில் கவனம் பெற்றார். அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எதுவுமே அவருக்குப் பெரிதாகப் பெயரைப் பெற்றுத் தரவில்லை.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ரம்யா பாண்டியன். முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ள இந்தப் படத்தில் இவரே பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார்.

இந்தப் படம் தொடர்பான அறிவிப்பைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். தற்போது அவருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்