10 வருடக் கனவு, 7 வருட உழைப்பு: டான் இயக்குநர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

தனது முதல் படம் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து, 'டான்' இயக்குநர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருந்தது. இன்று (ஜனவரி 27) காலை தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'டான்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் குறித்த அறிவிப்புக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது இயக்குநர் கனவு உறுதியாகியுள்ளது குறித்து நெகிழ்ச்சியடைந்துள்ளார் சிபி சக்ரவர்த்தி.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் சிபி கூறியிருப்பதாவது:

"10 வருடக் கனவு, 7 வருடக் கடின உழைப்பு, 3 வருடக் காத்திருப்பு. அது இந்த ஒரு நாளுக்காகத்தான். அது இன்றுதான். என் இயக்கத்தில் முதல் திரைப்படம். சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’, இசை ராக்ஸ்டார் அனிருத், லைகா தயாரிப்பு, எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்புடன். எனது குடும்பத்தினர், குரு அட்லி சார் மற்றும் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியுள்ள சிவகார்த்திகேயன் சார் ஆகியோருக்கு நன்றி".

இவ்வாறு சிபி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்