ரஜினிகாந்த் நடிப்பில், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படத்தின் வெளியீடு எப்போது என்கிற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்தது. தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திர தினம் எனப் பல தேதிகள் ஊகிக்கப்பட்டன.
» 'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா
» சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே 'அண்ணாத்த' படப்பிடிப்பு?
ஆனால், தற்போது 2021 தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதியன்று திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 'அண்ணாத்த தீபாவளிக்குத் தயாராகுங்கள்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் தரப்பு பகிர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago