'ஆச்சாரியா' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த 3 படங்களை சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆச்சாரியா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ராம்சரண் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
'சைரா' படத்தைத் தொடர்ந்து 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவுள்ளார். மோகன் ராஜா இயக்கவுள்ள இந்தப் படத்தை ராம்சரண், சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் என்.பி.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்தப் பூஜையில் தனது 4 இயக்குநர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் சிரஞ்சீவி. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, எனது 4 கேப்டன்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதில் 'சைரா' இயக்குநர் கொரட்டலா சிவா, மோகன்ராஜா, மெஹர் ரமேஷ் மற்றும் பாபி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
'வேதாளம்' படத்தின் ரீமேக்கைத்தான் மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. பாபி இயக்கவுள்ள படத்தின் பணிகளும் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. ஒரே சமயத்தில் வேகமாக 4 படங்களை முடிவு செய்திருப்பது, சிரஞ்சீவி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago