பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நாயகனாக நடித்து வரும் படத்துக்கு 'பொம்மை நாயகி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.
'அடங்காதே', 'ஜகஜால கில்லாடி', 'மண்டேலா', 'வெள்ளை யானை', 'கடைசி விவசாயி', 'ட்ரிப்', 'சலூன்', 'டாக்டர்', 'அயலான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. இதில் சில படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.
தற்போது தான் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் யோகி பாபு. இந்தப் படத்தை பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். இதில் யோகி பாபுவுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
'பொம்மை நாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 22) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக சுந்தர மூர்த்தி, ஒளிப்பதிவாளராக அதிசயராஜ், எடிட்டராக ஆர்.கே.செல்வா, கலை இயக்குநராக ஜெயரகு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
'பொம்மை நாயகி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago