யூடியூப் தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவு தொடர்பாக அனிகா விளக்கம் அளித்துள்ளார்.
அஜித்துடன் 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் அனிகா. இதில் 'விஸ்வாசம்' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அதனைத் தொடர்ந்து வேறு எந்தவொரு படத்திலும் நடிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் அனிகா.
அவ்வப்போது தனது சமூக வலைதளத்தில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்தார் அனிகா. இந்தப் புகைப்படங்கள் வைரலாக பரவியது. இதை வைத்து பலரும் அவரை நாயகியாக நடிக்க வைக்க அணுகிவருகிறார்கள்.
இந்நிலையில் அனிகாவின் நடனம் என்ற பெயரில் யூடியூப் பக்கத்தில் சில வீடியோக்கள் வைரலானது. அந்த வீடியோக்கள் ஆபாச உடையணிந்து நடனமாடுவது போல் இருந்தது. இதை வைத்து பலரும் அனிகாவிடம் கேள்வி எழுப்பிவந்தார்கள். இது தொடர்பாக அனிகா வீடியோ வடிவில் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அனிகா கூறியிருப்பதாவது:
"கருப்பு உடையில் நான் நடனமாடுகிறேன் என்ற பெயரில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பார்க்கிறேன். அது நான் அல்ல. மார்ஃப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. எனக்கும் அந்த வீடியோவை சிலர் அனுப்பி விசாரித்தனர்.
சில யூடியூப் சேனல்களிலும் பதிவேற்றப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதலில் நான் பார்க்கும்போது எனக்கும் அது நிஜ வீடியோவைப் போலவே தோன்றியது. அவ்வளவு துல்லியமாக மார்ஃபிங் செய்துள்ளனர்.
இந்த வீடியோவை இணையத்திலிருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்திருக்கிறோம். ஏனென்றால் அது பார்க்க உகந்த வீடியோ அல்ல. நீங்களும் அந்தந்த யூடியூப் சேனல்களுக்குச் சென்று அந்த வீடியோ குறித்து புகார் தெரிவித்து அதை நீக்க உதவினால் நன்றாக இருக்கும்.
வழக்கமாக சமூக வலைதளத்தில் நான் இது போன்ற விளக்கங்கள் தருவதில்லை. ஆனால் இந்த வீடியோ எல்லை மீறியதாகத் தோன்றியது. எனவே இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்"
இவ்வாறு அனிகா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago