'வலிமை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனென்றால், 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வெளியான போதே விஜய் - ஹெச்.வினோத் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. ஆனால், அது படமாக இறுதியாகவில்லை.
அதற்குள் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி முடிவாகி 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர். தற்போது 'தளபதி 65' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி, தீபாவளிக்குப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
» 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் பணிகள் துவக்கம்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்
» மனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் மருத்துவர் சாந்தா: சூர்யா புகழாஞ்சலி
'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அடுத்த கதையைத் தயார் செய்வார் ஹெச்.வினோத். விஜய்யும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார். ஆகையால் இருவரும் இணைவது சரியாக இருக்கும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டணி இணைவது தொடர்பாக விசாரித்த போது, "இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. ஏனென்றால் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது முடிவாக வேண்டும். அதற்குப் பிறகே சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago