பத்து தல ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'முஃப்தி'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தமிழ் ரீமேக்கையும் இயக்குநர் நரதனே இயக்கி வந்தார். இந்தப் படம் தாமதமானதால், யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார் நரதன். இதனால் 'முஃப்தி' தமிழ் ரீமேக் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்துமே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. 'சில்லுனு ஒரு காதல்' இயக்குநர் கிருஷ்ணா மீதமுள்ள காட்சிகளை இயக்கவுள்ளார். 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது 'மாநாடு' படத்தில் கவனம் செலுத்தி வரும் சிலம்பரசன், அதனைத் தொடர்ந்து 'பத்து தல' படத்துக்குத் தேதிகள் ஒதுக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளது உறுதியாகி இருக்கிறது. ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரஹ்மான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்